என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி சமையலறையை இடித்து பொருட்களை கொள்ளையடித்த கும்பல்
- காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 130 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் காலை உணவு செய்வதற்கான சமையலறை உள்ளது.
சமையல் பொருட்கள் திருட்டு
அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல், கோதுமை ரவா உப்புமா, காய்கறிச் சாம்பார் போன்ற உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக பள்ளி சமையல் அறையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சமையல் கூடத்தின் கதவு, ஜன்னல் உள்ளிட்வைகளை இடித்து உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த கியாஸ் சிலிண்டர், அரிசி, பருப்பு, முட்டை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் அனைத்தையும் திருடி சென்றனர்.
இன்று காலை உணவு சமையல் செய்வதற்கு எந்த பொருட்களும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று பார்த்தபோது சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் மர்ம கும்பல் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தனிகாசலம், காடையாம்பட்டி தாசில்தார் மாதேஸ்வரன், ஓமலூர் தாசில்தார், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், பள்ளியில் புகுந்து சமையல் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். எனவே பெற்றோர் அமைதி காக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என சமாதானப்படுத்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்