search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தி வழங்க கோரி ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

    • சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேலம்:

    போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இது குறித்து மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில் கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு கேட்டு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. குறிப்பாக தீபாவளிக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை செயலாளர் உறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

    Next Story
    ×