search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில்  மீண்டும் பூக்கள் விலை உயர்வு
    X

    சேலத்தில் மீண்டும் பூக்கள் விலை உயர்வு

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    விலை உயர்வு

    ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 23-ந் தேதி விலை குறைந்த நிலையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இன்று விலை மீண்டும் அதிகரித்து 600 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல நேற்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று 400 ரூபாய்க்கும், ஜாதி மல்லிகை பூ நேற்று 260 விற்கப்பட்ட நிலையில் இன்று 280 ஆகவும் உயர்ந்தது.

    இதே போல காக்கட்டான் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரளிப்பூ 120 ரூபாயிலிருந்து 160 ஆகவும் உயர்ந்தது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர்.

    முகூர்த்த நாள்

    வருகிற நாட்களில் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழாக்கள் இருப்பதாலும் இந்த பூக்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×