search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்

    • வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
    • இதையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன மழை

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்றிரவும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் நேற்று பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வி வசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 9.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    வானிலை எச்சரிக்கை

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 6-ந் தேதியான இன்றும், நாளையும் (7-ந் தேதியும்) இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×