என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகாளய அமாவாசையையொட்டி சேலம் அணைமேட்டில் பொதுமக்கள் குவிந்தனர்
- அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம்.
- அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
சேலம்:
முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான நாளாக அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம். அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
மகாளய பட்ச காலம்
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலமாகும்.இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.
அதன்படி மகாளய அமாவாசையான இன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் அணை மேடு பகுதியில் இன்று காலை முதலே பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதில் முன்னேர்களை நினைத்து ேதங்காய் பழம் உடைத்து எள், அரிசி, பூக்களை வாழை இலையில் வைத்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி அணை மேடு பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
இதே போல சுகவனேஸ்வ ரர் கோவில் நந்தவனம் பகுதியிலும் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
மேட்டூர், பூலாம்பட்டி காவிரி ஆறு உள்பட பல்வேறு நீர் நிலைகளிலும் பொது மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி சேலம் அணைமடு, சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்