என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டுமாணவ, மாணவிகளின் பேரணி, புகைப்படக் கண்காட்சி
- தமிழ்நாட்டிற்கு “தமிழ் நாடு ” என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
- இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு " என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, நாளை காலை 9.30 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேரணி நடைபெறகிறது.
பெரியார் சிலை அருகே பேரணி தொடங்கி, திரு வள்ளுவர் சிலை வழியாக சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவடைய வுள்ளது.
தொடர்ந்து கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
அதேபோன்று, சேலம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புப் புகைப்படக்கண் காட்சி அரங்கினை பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் நாளை முதல் 23-ந் தேதி வரை அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர், நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்