search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடையில் இருந்து  லாரியில் 3 டன் அரிசி கடத்தல்
    X

    ரேஷன் அரிசி மூட்டையுடன் பிடிபட்ட லாரி.

    ரேசன் கடையில் இருந்து லாரியில் 3 டன் அரிசி கடத்தல்

    • நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    போலீஸ் ரோந்து

    அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரேசன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வாழப்பாடி அருகே உள்ள கீரிப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    6 பேர் கைது

    இது தொடர்பாக போலீசார் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விக்டர் ேஜம்ஸ், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா, வாழப்பாடியை சேர்ந்த சுப்பிரமணி, குகை பகுதியை சேர்ந்த நடேசன், ஒடிசாவை சேர்ந்த ஷாமால் கோம் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரியில் 3 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தது.

    ஊழியர் தப்பி ஓட்டம்

    இந்த நிலையில் இந்த ரேசன் கடையின் ஊழியருக்கும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரம் என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு ரேசன் அரிசி கடத்த முயன்றனர்.

    Next Story
    ×