என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது
- கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது.
- அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சேலம்:
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேருவதற்கான விண்ணப்பபதிவு நிறைவு பெற்ற நிலையில், சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதற்கு விண்ணப்ப பதிவு மேற்கொண்டு இருந்தனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில், 25 ஆயிரத்து 253 மாணவிகள் உள்பட 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த 40 ஆயிரத்து 287 பேரில், 10 ஆயிரத்து 918 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன் பெற இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.
2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது
முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று தொடங்கிய 2-ம் கட்ட கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்க ளால், அவர்களது கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவு களை மாணவ- மாணவி கள் தேர்வு செய்தனர்.
வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இந்த 2 கட்டங்களாக நடத்தப்படும் கலந்தாய்வில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்