என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காடையாம்பட்டி அருகே தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்1 Oct 2023 1:24 PM IST
- சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
- இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர்.
காடையாம்பட்டி:
சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ்களும் பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, அக்கரகாரம், தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை பூசாரிப்பட்டியை சேர்ந்த பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் பி. எஸ். கே. செல்வம் தலைமையில் பொது மக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
×