search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி - 600 காளைகள் பங்கேற்பு

    • சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    • இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை கலெக்டர் கார்மேகம் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையா ளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வா கத்தால் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்ப டுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படு கிறது.

    மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளை களின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதி முறைகளையும் முழுமை யாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு மாறன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×