என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடி அருகே பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் சப்பரபவனி
- விழா நாட்களில் அம்மன், பவளமுத்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- 11-ம் திருவிழாவில் நள்ளிரவு 1 மணிக்கு அம்மன், விநாயகர் ஆகிய 2 பூஞ்சப்பர பவனி தொடங்கியது.
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்ரகாளி அம்மன் கோவிலில் 12 நாள் புரட்டாசி திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன், பவளமுத்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், அம்பாள் உள்பிரகார சப்பரபவனி, ஊஞ்சல் சேவை, சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி கோலத்தில் பவனி வருதல், வில்லிசை, திருவிளக்கு பூஜை, தினசரி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
11-ம் திருவிழாவில் நள்ளிரவு 1 மணிக்கு அம்மன், விநாயகர் ஆகிய 2 பூஞ்சப்பர பவனி தொடங்கியது. மறுநாள் காலையில் சப்பரங்கள் கோவிலை வந்தடைந்தவுடன், கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு வரிபிரசாதம் வழங்கல் நடைபெற்றறது.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தர ஈசன் மற்றும் விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.