search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மகாளய அமாவாசையையொட்டி ஆதி மங்கல விநாயகர் கோவிலில் சஷ்டி மகா வேள்வி பூஜை
    X

    மகாளய அமாவாசையையொட்டி ஆதி மங்கல விநாயகர் கோவிலில் சஷ்டி மகா வேள்வி பூஜை

    • பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம், தென்சேரிமலை ஆதினம் தலைமையில் விழா நடந்தது
    • 4 விதமான 108 வகையான மூலிகைகளை வைத்து சிறப்பு யாகம்

    கவுண்டம்பாளையம்,

    கோவை கவுண்டம்பாளையம் சிவநகரில் ஸ்ரீ ஆதி மங்கல விநாயகர் கோவில்- சிவாலயத்தில் 2-ம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவின் முதலாம் ஆண்டு விழாவில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு சஷ்டி மகா வேள்வி பெருவிழா நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் ராமானந்த குருமகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது.

    வெள்ளிகிழமை மாலை வாஸ்து வழிபாடுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இன்று திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆனைந்து வழிபாடு, மூத்தபிள்ளையார் வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு சஷ்டி மகா யாகப் பெரு வேள்வி தொடங்கியது. இந்த வேள்வியானது குழந்தைகளுக்கு கல்வி ஞானம் பெரும், நோய் மற்றும் துன்பம் நீங்கும். தொழில்கள் முன்னேற்றம் அடையும், மழைவளம் பெருகும் மற்றும் அனைத்து சுபகாரியங்கள் நடைபெறும். தொடர்ந்து 4 விதமான 108 வகையான மூலிகைகளை வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து விநாயகர், அம்மன், சிவன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களுக்கும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் குடங்கள் மூலம் ஊற்றப்பட்டது. அதன்பிறகு அபிசேக பூஜைகள், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×