search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி
    X

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி துடிசியா நிறுவன மேலாளர் எஸ்.மரிய சந்தான ரஞ்சித்துக்கு ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராம்ராஜ் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி

    • போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பாலிடெக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பேச்சு, கவிதை, குழு நடன போட்டி ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், தொழில் கல்வி படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகள், தமிழ்-ஆங்கிலத்தில் பேச்சு போட்டி, கவிதை போட்டிகள் மற்றும் குழு நடன போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பாலிெடக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. இதில் ஏராளமான பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராம்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்ததுடன், சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். கல்லூரி செயலாளர் செள.நாராயணராஜன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி துடிசியா நிறுவன மேலாளரும், கல்லூரி முன்னாள் மாணவருமான எஸ்.மரிய சந்தான ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். பேராசிரியர் எஸ்.டார்வின் வரவேற்று பேசினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் எஸ்.சிவனணைந்த பெருமாள் நன்றி கூறினார்.

    பரிசு

    பள்ளிகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சபரிவாசன், நித்தீஷ்குமார் ஆகியோர் முதல் பரிசும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி 2-வது பரிசும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 3-வது பரிசும் பெற்றன. கமலாவதி மேல்நிலைப்பள்ளி, எலியட் டக்ஸ்போர்டு, காஞ்சி ஸ்ரீசங்கரா, சின்மயா வித்யாலயா, செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றன.

    பாலிெடக்னிக் கல்லூரிகளுக்கான போட்டியில் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல் 2 பரிசுகளையும், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி 3-வது பரிசையும் பெற்றன. பேச்சு, கவிதை, குழு நடன போட்டி ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    பயிற்சி பட்டறை

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு சார்பில் ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு போட்டானிக்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் 'உருவகப்படுத்துதல் கருவிகளை பயன்படுத்தி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் போட்டானிக்ஸ் அமைப்பில் வடிவமைப்பு திறன் மேம்பாடு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இணை பேராசிரியர் இரா.மஞ்சித் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருச்சி கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மூத்த உதவி பேராசிரியர் வினோத், மென்பொருள் பயிற்சி வழங்கினார். ராபீட் செமிகன்டைகர் தொழில்நுட்பத்தின் இணை நிறுவனர் கார்த்திகேயன் குறைகடத்தி தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினார். துறை தலைவர் பெனோ வாழ்த்துரை வழங்கினார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×