search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட  எரிசாராயத்தை தொழிற்சாலைகளுக்கு  பயன்படுத்த பொது ஏலம்
    X

    காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட எரிசாராயத்தை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த பொது ஏலம்

    • போலீசார் கைப்பற்றிய எரிசாராயம் ஏலம் விடப்படுகிறது.
    • தொழிற்சாலைகள் இதனை ஏலம் எடுப்பார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட எரிசாராயத்தை தொழிற் சாலை பயன்பாட்டிற்கு வருகிற 12-ந் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட எரிசாராயத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. மேற்படி எரிசாராயத்தினை சென்னை தடய அறிவியல் துறையினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு உகந்தது என ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஆயுதபடை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள 42 ஆயிரத்து 273 லிட்டர் எரிசாராயத்தினை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு குறையாமல் பொது ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி எரிசாராயத்தினை வருகிற 12-ந் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

    மேலும், இந்த நேர்வில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மேற்படி பொது ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×