என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்29 Jun 2022 12:23 PM IST
- திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனையிட்டனர்
- கேட்பாரற்று கிடந்த பேக்கில் அரசால் தடைசெய்யப்பட்ட 4.180 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற ரெயிலை கொடைரோடு ரெயில்நிலையத்தில் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பேக் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அது யாருடையது என பயணிகளிடம் கேட்டபோது யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனைதொடர்ந்து போலீசார் அதனை சோதனை நடத்தினர்.
அப்போது பல்வேறு வகையான அரசால் தடைசெய்யப்பட்ட 4.180 கிலோ புகையிலை பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து ரெயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×