search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    பண்ருட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிபகுதிக்கு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தர படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீஸார் பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில்அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துகடை ஊழியர் தட்டாஞ்சாவடி பிரகாசிடம் (25) விசாரணை நடத்தினர்.

    அவர்பண்ருட்டி, தட்டா ஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கடையில் இருந்த பாக்கெட் புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிரகாஷ் தெரிவித்த குடோனுக்கு அவரை அழைத்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 5000 கிலோ புகையிலை பொரு ட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×