search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க இடம் தேர்வு-எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்கும் இடத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க இடம் தேர்வு-எம்.எல்.ஏ. ஆய்வு

    • சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் விரைவில் 10 திட்டங்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    சுரண்டை:

    சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டிய 10 திட்டங்கள் என்னென்ன என ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் கேட்டிருந்தார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கும் 10 அடிப்படை திட்டங்கள் குறித்து கடிதம் வழங்கியிருந்தார்.

    இந்த நிலையில் சுரண்டையில் பஸ் டெப்போ அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய பழனி நாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளின் வணிக மேலாளர் சாலமோன், மண்டல வணிக மேலாளர் சசி, உதவி மேலாளர் இயக்கம் சண்முகம், ஏடி அழகிரி மற்றும் கவுன்சிலர்கள் வேல் முத்து, அமுதா சந்திரன்,காங்கிரஸ் நிர்வாகிகள் சவுந்தர், அரவிந்த், பிரபாகர், தர்மர் ஆகியோர் சுரண்டை பங்களாச்சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தையும், ஆணைகுளம் ரோட்டில் உள்ள புறம்போக்கு இடங்களையும் ஆய்வு செய்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் விரைவில் 10 திட்டங்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    Next Story
    ×