என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் 100 பேருக்கு தையல் எந்திரம் - கனிமொழி எம்.பி. வழங்கினார்
- முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இலவச தையல் எந்திரத்து டன் சான்றுகள் வழங்கும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
- கலைஞர் ஆட்சியில் தொடர்ந்த திட்டங்களின் மூலம் இன்று முதல்-அமைச்சர் ஆட்சிக்கு திராவிட மாடல் அடித்தளமாக அமைந்தது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
தூத்துக்குடி:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு என்.பெரியசாமி அறக்கட்ட ளை மற்றும் மகளிர் திட்ட ஒருங்கிணைப்புடன் முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இலவச தையல் எந்திரத்து டன் சான்றுகளும் மற்றும் தையல் பயிற்சி பெற்ற 68 பெண்கள் மொத்தம் 100 பேருக்கு தையல் எந்திரம் வழங்கும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் அனைவரும் முறையாக தையல் பயிற்சி பெற்றவர்கள். தமிழகத்தில் ஓரே பெண் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் மட்டும் தான். இது தான் நமக்கு பெருமை.
கலைஞர் ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பிக்க ப்பட்டது. உலகத்தில் நடப்பதை இல்லத்தில் இருந்து தெரிந்து கொள்ள தொலைக்காட்சி பெட்டி வழங்கி , அடுப்பூதிய பெண்களுக்கு கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. காவல் துறையில் பெண்கள் பணி உருவாக்கப்பட்டது. இப்படி சாதனைகளை அடுக்கி கொண்டே செல்ல லாம். கலைஞர் ஆட்சியில் தொடர்ந்த திட்டங்களின் மூலம் இன்று முதல்-அமைச்சர் ஆட்சிக்கு திராவிட மாடல் அடித்தள மாக அமைந்தது. கலை ஞரின் நூற்றாண்டு விழா வை ஒரு வருடம் கொண்டாட உத்தர விடப்ப ட்டுள்ளது. அதை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண் டாட வேண்டும் என்றார்.
விழாவில் மார்க் கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வ ராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்ன லட்சுமி, கலைச் செல்வி, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, ராஜா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், பொறி யாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெபக்கனி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமார், விஜயகுமார், வைதேகி, மகேஸ்வரி, மரியகீதா, சரண்யா, நாகேஸ்வரி, ஜெய சீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜான்சிராணி, சுப்புலட்சுமி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாரா யணன், செல்வ க்குமார், வட்டச்செ யலாளர்கள் முக்கையா, கருப்பசாமி, கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், சதீஷ்குமார், செல்வராஜ் மற்றும் கருணா, மணி, பிரபாகர், கவிதாதேவி பெல்லா, சந்தமாரி, லிங்கராஜா, ரேவதி, மகேஸ்வரன்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்