search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கல்
    X

    தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டது. 

    காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கல்

    • 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கினார்.
    • விளம்பு நிலை குடும்பத்தினருக்கு புதிய தையல் எந்திரமும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சாலையோரம் காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகள் தற்போது ஆரம்பித்துள்ள மழை காலத்திலும் தங்களது தொழிலை தடங்கலின்றி தொடர்ந்து செய்யும் வகையில் பெரிய அளவிலான நிழற்குடைகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    தஞ்சை நகர பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு அவரவர் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று இந்த குடையை ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார். மேலும் கோரிக்கையின் அடிப்படையில் விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, "ஜோதி அறக்கட்டளை மூலம் மாநிலம் முழுவதும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு மழை காலத்திலும் தங்களது வேலை தடைபடாமல் தொடர நிழற்குடைகள் தொழிலாளிகள் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது. மேலும் விளம்பு நிலை குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு புதிய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது . மொத்தத்தில் ரூ. 65,000 மதிப்பீட்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன " என்றார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்கு மார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×