என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆறுதல்
- மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நம்பியார் நகரை சார்ந்த மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அவர்களின் மீன்கள், வலைகள், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் சின்னத்தம்பி, சந்த்ரு, மாதேஸ், சிவபாலன் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்படுவதும், கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒன்றிய அரசு எப்போதும் போல் அலட்சியமாக நடந்து கொள்கிறது.
இனியாவது ஒன்றிய அரசு இதில் தலையிட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.