search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்

    கடையத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்

    • கடையத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இயற்கை வளபாதுகாப்பு சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து நேற்று மாலை

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயற்கை வளபாதுகாப்பு சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார்.

    கடையம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், கடையம் வட்டார இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவரும்,கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவருமான பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, மாவட்ட செய லாளர் ஜமீன் உள்பட பல ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ரிலையபிள் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதுரை, தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், ஆலங்குளம் சங்கீதா ஈசாக், செங்கோட்டை ராம்மோகன், முல்லை நில தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கரும்புலிகண்ணன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடையம் பகுதியிலிருந்து கனரன லாரிகள் மூலம் கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு துணைச்செயலாளர் ராஜசேகர், கடையம் சி.பி.எம்.ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சி லர்கள் புளி கணேசன், மணிகண்டன், ஜனதா, இசக்கியம்மாள், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×