search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம்-பட்ட மங்கலம் சாலையில் உள்ள ஆலமர பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கோஷ்டி யூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் நடத்திய விசா ரணையில், காட்டாம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெய மணி மகன் ஜெயகாந்தன் என தெரியவந்தது. தச்சு தொழிலாளியான இவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை.

    முகம், கைகளில் ரத்த காயங்கள் இருப்பதால் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குடும்ப பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் ஜெயகாந்தன் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டம்; 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஆ.ராசா. எம்.பி. ஆகியோர் வழங்குகின்றனர்.
    • தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டங் கள் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் மற்றும் பல்வேறு அணிகளின் சார்பில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.முக. சார்பில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் காளையார் கோவில் தெப்பக்குளம் தென்கரை யில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறு கிறது. ஒன்றிய செயலா ளர்கள் யோக.கிருஷ்ண குமார், ஆர்.எம்.கென்னடி ஆகியோர் வரவேற்றுப் பேசுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ஆர்.முத்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷணி கவிராஜ், நி ர்வாகிகள் முத்து, வனிதா கண்ணதாசன், கருப்புசாமி, பி.கந்தசாமி,சி.குழந்தை சாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தேவர் அருட்செல்வி அரசு, எஸ்தர்மேரி ஸ்டிபன், சவுந்திரராஜன், தினேஷ் அரசு, ஆர்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி யும், கருணாநிதி குறித்தும் சிவகங்கை மாவட்ட செய லாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் தென்னவன், தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத் தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள் கிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் வே.ஆரோக்கியசாமி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் பாக முக வர்களுக்கு கைபேசி வழங்குதல், கைம்பெண்க ளுக்கு தையல் எந்திரம் வழங்குதல், முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கு தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்குதல், ஆதர வற்ற தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    • நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திரா நகர் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையேற்றார். நிகழ்வில் கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விதை பந்து வழங்கப்பட்டது.

    மேலும் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
    • தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்து இருக்கின்றன.

    இதில் மத்திய தொல்லியல் துறை தரப்பில் 3 முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 முறையும் அகழாய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த 8 கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான தொல் பொருட்களை மக்கள் பார்க்கும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூ.18 கோடியே 46 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் தொடர்ச்சியாக கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் தொல்லியல் துறை இணை இயக்குனரும், கீழடி இயக்குனருமான ஆர்.சிவானந்தம், தொல்லியல் அலுவலர் காவியா ஆகியோர் தலைமையில் கொந்தகையில் நடைபெற்று வரும் 4-வது கட்ட அகழாய்வில், 'இசட்.கியூ.3' என்ற அகழாய்வு குழியில் 46 செ.மீ. ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது. இது கருப்பு, சிவப்பு நிற வகையை சார்ந்தது.

    அந்த தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்திலும் இருக்கிறது. அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.

    வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண்ணாடி மணிகள், பாசி மணிகள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட்கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது கண்டெடுக்கப்பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கையில் ரெயில் மறியல் போராட்டம் போராட்டம் என்று எப்படி கூற முடியும்? சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது விரைவு ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல ஏன் நடவ டிக்கை எடுக்க வில்லை?

    அனைத்து விரைவு ெரயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவ கங்கை வழியாக ராமேசு வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் ெரயில்வே மண்டல மேலா ளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட் டம் நடத்துவோம்.

    அ.தி.மு.க. கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது, இண்டியா கூட்டணி சார் பில் நடத்தப்படுவதாக தெரிவித்து விட்டு அனைத்து கட்சி சார்பில் போராட்டம் என்று நோட்டீஸ் கொடுத் துள்ளனர். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்
    • சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத் தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்ட சத்து பெட்டகங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம் களை நடத்திட உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 2-வது முகாம் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு நோய்களுக்கான தன்மையை கண்டறிந்து அதுக்கான உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல்நலம் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், சன் சீமான் சுப்பு, ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரி காளிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, ஏரியூர் மருத்துவர் பிரேம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • குடும்ப சூழலை கருத்தில் கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
    • வீரராகவன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் அரசு போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்க ளுக்கான அறிவிப்புகள் அவ்வப்போது வரப்பெறு கின்றன. தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தினந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கையைச் சேர்ந்த தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், சிவகங்கையிலும் படிப்பு வட்டத்தில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    முன்னதாக காரைக்குடி பகுதியைச் சுற்றியுள்ள தேர்வாளர்களும் பயன்பெறும் வகையில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் தேர்வா ளர்களும் பயன்பெற்றுள்ள னர்.

    தேர்விற்கு தேவை யானதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். குறிப்பாக தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். நல்லமுறையில் பயின்று தாங்கள் பயின்றதை திருப்புதல் செய்தலும் மிகவும் அவசியம் ஆகும். நாம் படிப்பதில் புரிதல் இருக்க வேண்டும்.

    அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளை முறையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று தங்களது வாழ்வில் சிறந்து விளங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன ச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் வானதி, மாவட்ட கலெக்டன் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை நகராட்சியில் குறைகளை தீர்க்க அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறப்பட்டுள்ளது.
    • கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், முனியசாமி ஆகியோர் பேசினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் மாரியப்பன் சென்னடி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மானாமதுரை வாரச் சந்தை, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்ட ணம் வசூலிக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள மிதிவண்டி நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக் கும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு நடத்தப்பட்ட பொது ஏலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மானாமதுரையில் குடி. நீர்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூடுதல் பணியா ளர்களை நியமிக்க ஒப்புதல் அளிப்பது, கீழப்பசலை, மாங்குளம், சூரக்குளம் பில்லறுத்தான், கல் குறிச்சி, செய்களத்தூர், கீழமேல் குடி ஆகிய ஊராட்சிகளில் நகர் பகுதியுடன் ஒட்டியுள்ள தேர்வு செய்யப்பட்ட விரிவாக்கப் பகுதிகளை மானாமதுரை நகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து அரசுக்கு கருத்துரு அனுப்பு வது உள்ளிட்ட 33 தீர்மானங்களுக்கு உறுப் பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கை களை முன் வைத்தனர். தி.மு.க . உறுப்பினர் மாரி கண்ணன் பேசுகையில், எனது வார்டில் இன்னும் புதிய தெரு விளக்குகளை பொருத்த வில்லை. நகராட்சி அலுவ லர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றார்.

    கவுன்சிலர்கள் தெய் வேந்திரன், முனியசாமி ஆகியோரும் பேசினர். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு ஆணையர் ரெங்கநா யகி பதிலளிக்கையில், தற்போது பணிபுரியும் அலுவலர்கள் நேரடியாக புதிதாக பணிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை எப்படி அனுகுவது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, சொத்து வரி, பெயர் மாற்றத்துக்கான பணிகளை இன்னும் ஒரு மாத்துக்குள் பணிகளை முடிக்கத் தேவையான நட வடிகைகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். தலைவர் மாரிப்பன் கென்னடி பேசுகையில், தற்போது டெங்கு பரவி வருவதால் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளை விரைவாகசெய்ய வேண்டும் என்றார்.

    • மானாமதுரையில் வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் வைகையாற்றை சுத்தப்படுத்தும் பணி நீர்நிலை பாதுகாப்புக்குழு சார்பில் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், இந்தோ திபெத் எல்லைப் படை வீரர்கள், நீர்நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகையாற்றுக்குள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு வளர்ந்திருந்த அமலைச்செடிகளை அகற்றினர். மேலும் குப்பைகளையும் அப்புறப் படுத்தினர். அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வந்து இந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், சிவகங்கை மாவட்டத் தில் வைகையாறு சுத்தப் படுத்தும் பணி ஏற்கனவே திருப்புவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழு வதுமுள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த பணியில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்கள் பங்க ளிப்பை வழங்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரங்க நாயகி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் நேஷனல் அகாடமி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • சமூக ஆர்வலர் விஸ்டம் கமருதீன் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது. ஊர்வலத்தை தலைமை அரசு மருத்துவர் சாந்தி தலைமை வகித்து கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் முன்னிலை வகித்தார். டெங்கு விழிப்புணர்வு பாததைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி அண்ணாசிலை, பேரூந்து நிலையம் வழியாக கோஷமிட்டு காந்தி சிலை சென்று அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணிநாரயணன் நில வேம்பு காசயம் வழங்கினார். துணை சேர்மன்கான் முகமது வரவேற்றார்.

    வார்டு கவுன்சிலர்கள் பஷீர் அகமது,சீனிவாசன் சரண்யா ஆகியோர் பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பிரசு ரங்களை வழங்கினர். இதில் மருத்துவர்கள் தமிழ்செல்வன், முத்துகுமார், பாசில், ஆமீனா பாதம், ஆசிரியர்கள் சதக்கத்துல்லா, சிவநேசன், பொன்னுச்சாமி மற்றும் பூவிழி, சாந்தி மோனிஷாா, சமூக ஆர்வலர் விஸ்டம் கமருதீன் கலந்து கொண்டார்.வெங்கடேஷன்நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளி களுக்கு ரூ.1216.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் அனுமதி மற்றும் வங்கி கடன் பட்டுவாடாவுக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்த விளங்க வேண்டும் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திடும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022-2023 முதல் 143 பயனாளிகளுக்கு 13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளி களுக்கு 20.13 கோடி கடனுதவி செய்து தருவ தற்கும் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.

    இதுதவிர மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அர சால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ் வாதாரத்தினை மேம் படுத்தி்க் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜுனு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரி 25-வது ஆண்டு விழா வருகிற 29ந்தேதி நடக்கிறது.
    • கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் நிறுவனர் என்ஜினீயர் மைக்கேல் ஆவார். இந்த கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில்கல்லூரி வளாகத்தில் நடைபெறு கிறது.

    இந்த கல்லூரி வெள்ளி விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் , ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பி .கே. அரவிந்த், தொழிலதிபர் எஸ்.மார்ட்டின், மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் தலை வர் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ஒருங்கி ணைப்பாளர் பிரிட்ஜெட் நிர்மலா, கல்லூரி முதல்வர் கற்பகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    ×