search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்றவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் காரணமாக ரெயில் புறப்படுவதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட தலைநகராக சிவகங்கை இருந்து வருகிறது. இதன் வழியாக பல்வேறு ரெயில்கள் சிவகங்கை வழியாக சென்றபோதிலும் சிவகங்கை நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் சிவகங்கையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பொதுமக்கள் ரெயில் வசதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிவகங்கை மக்கள் நீண்ட காலமாக முன் வைத்து வருகின்றனர்.

    இருப்பினும் ரெயில்வே நிர்வாகம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், கடையடைப்பு நடத்துவது என வணிகர்கள், அனைத்து கட்சியினர் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று (23-ந்தேதி) ரெயில் மறியல், கடையடைப்பு நடத்தப்படும் என அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கம், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து அறிவித்தனர்.

    இதையடுத்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோட்டாட்சியர் சுகிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உள்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இருப்பினும் இந்த கூட்டத்தில் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படாததால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று அனைத்து கட்சியினர், வணிகர்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதன் காரணமாக சிவகங்கை நகர் பகுதியில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகள், தெருக்கள், பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனிடையே ரெயில்வே திட்டங்களை செயல்படுத்தக்கோரி இன்று காலை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் மற்றும் அனைத்து கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்ற அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ரெயில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

    போராட்டம் காரணமாக ரெயில் புறப்படுவதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கடையடைப்பு, மறியலையொட்டி நகர்ப்பகுதி முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கியசாமி போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 294, 295ஏ, 505/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 20-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கியசாமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி விசாரணை நடத்தி எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 294, 295ஏ, 505/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    பொதுக்கூட்டங்களில் அவமரியாதையாக பேசுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத கலவரத்தை உருவாக்கும் வகையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • துறை சார்ந்த அலுவலர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் லால் வேனா பார்வையிட்டார்.தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    பின்னர் லால்வேனா கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை மேம்படுத்தும் வித மாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமன்றி துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டு பணிகளின் நிலை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்நத அலுவ லர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

    துறை சார்ந்த அலுவ லர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படை யில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மார்ச் 30-ந் தேதி பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையமான முத்துப் பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பத்தி னை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்க ளுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9944887754 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மானாமதுரையில் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையமாகும். இந்தியாவின் முக்கிய புண் ணிய ஸ்தலமான ராமேசுவ ரத்துக்கு இங்கு இருந்துதான் செல்ல முடியும். மேலும் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது பெரும் முயற்சி செய்து விருதுநகர்-மானாமதுரை இடையே ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுத் ததால் இப்போது மதுரை, திண்டுக்கல் சுற்றிசெல்லா மல் குறைந்த பயண தூரத் தில் தென்மாவட்டங்களுக்கு ரெயில் வசதிகள் கிடைத்துள்ளது.

    ஆனால் தற்போது ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் மற்றும் சிவகங்கை ரெயில் நிலை யங்களில் ரெயில்கள் நிற்காமல் செல்ல நடவ டிக்கை எடுத்துள்ளது. பத்து ஆண்டுகளாக மானாமதுரை யில் இருந்து மன்னார்குடி சென்ற ரெயில் தற்போது காரைக்குடியில் இருந்து செல்கிறது.

    காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பி ரஸ் ரெயிலை மானாமதுரை யில் இருந்து இயக்ககோரியும், பைபாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை அகற் றக்கூடாது என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கடைய டைப்பு போராட்டம் நடத்து வது என தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக தீர்மான மும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

    மானாமதுரை புறவழிச் சாலையில் ஆனந்தபுரம் பகு தியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையை ஏராள மான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாதையை மூடவும், கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் செயல்ப டுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதில் மாற்றுப்பாதை அமைக்கும் வரை புறவழிச்சாலையில் ரெயில்வே கட வுப்பாதையை மூடக்கூடாது. இதை மீறி மூடினால் கட வுப்பாதை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். சமீபத்தில் நிறுத்தப்பட்ட திருச்சி-மானாமதுரை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

    வருகிற 23-ந்தேதி வர்த் தக சங்க ஒத்துழைப்புடன் மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானிக்கப் பட்டது. இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    • இளையான்குடியில் 129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் உள்ள உதயனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடி யாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந் தேடுத்து அதில் உள்ள கிரா மங்களுக்கு சென்று பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வருகிறது.

    இந்த முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி யுடைய 130 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட் டங்களின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம் பாட் டிற்கு மகளிர் திட்டம் கூட்டு றவு சங்கங்களின் மூலம் கிஷான் அட்டை, கால்நடை பராமரிப்பு, கடன் பயிர் கடன் மற்றும் கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து பயன் பெறுவதற்கென ஒரு ஹெட் டருக்கு ரூ. 7,500 தொகை என அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசால் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை அணு பயன்பெற வேண்டும்.

    மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான நபர்களை தவிர நிரா கரிக்கப்பட்ட மனுக்களுக்கு அதற்கான காரணங்களை இணையதளத்தின் வாயி லாக தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை மேல் முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப் பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர்சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, உதயனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரிட்டோ, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விண்ணை முட்டும் அளவிற்கு பூக்கள் விலை உயர்வால் வாங்க வரும் மக்கள் தவிக்கின்றனர்.
    • குத்தகை முறையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரைச் சுற் றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர்.

    சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களுக்கு பூ மாலைகள் வாங்குவதற்கு தேவ கோட்டை நகரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பூக்கடை உரிமையாளர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத் திற்கு மேல் எந்த பூக்க டைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அவர் விலை நிர்ணயம் செய்து கொள்ள லாம். அன்றைய தினம் மல்லி கைப்பூ சாதாரண நாளில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதை அன்றைய தினம் ரூ.100-க்கும், சிறிய வகை மாலை சாதாரண நாளில் ரூ.50-க்கு விற்பனை செய் வதை ரூ.100 முதல் ரூ.150-க்கும் பெரிய மாலைகள் சாதாரண நாளில் ரூ.500-க்கு விற்பனை செய்வதை ரூ.1,000-க்கும் மேலும் விற்பனை செய்கின்றனர்.

    இந்த நாட்களில் ஏலம் எடுத்த ஒரு பூ கடை மட்டுமே திறந்து இருப்பதால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரம் குறைந்தும் அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகி றார்கள். பூக்கடை உரிமை யாளர்கள் இந்த நூதன மோசடி யால் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் அன்றைய தினம் பூ மற்றும் மாலை களை வாங்கி செல்கி ன்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்க மான நடை முறை போல் பூக்கடைகள் செயல்பட்டால் பொதுமக்கள் நிம்மதி அடை வார்கள் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • கற்பக விநாயகருக்கு 18 படி பச்சரிசி கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலையில் தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று காலை கற்பக விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மதியம் மூலவருக்கு கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்காக கோவில் மடப்பள்ளியில் 18 படி பச்சரிசியை கொண்டு பிரமாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • இந்திய பிரதமர் யார் என்பதை அ.தி.மு.க. தான் தீர்மானிக்கும்.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பில் காளை யார்கோவிலில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய தாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்ற வில்லை. ஆனால் எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வருடத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மருத்துவர்களாகி வருகின்றனர்.

    உண்மையான சமூக நீதி அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளைக் கைப்பற்றி இந்திய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பா டியாரின் தலைமையில் ஆட்சி அமைய ஒற்றுமை யுடன் பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில். தமிழக அரசியல் களத்தை மிகப்பெரிய செல்வந்தர்கள் ஜமீன்தார்களிடமிருந்து மீட்டு சாமானியர்களிடம் கொண்டு சென்றவர் அண்ணா என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய யெலாளர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில் குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை உள்பட கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் லட்சுமி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி போக்குவரத்து நகரில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிசேகம், ஆரா தனை நடைபெற்றது.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ஒன்றிய கவுன்சி லர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை சாக் கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட மகளிரணி தலைவி சித்திராதேவி, நகர மகளி ரணி செயலாளர் சுலோச் சனா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவி மீனாள், தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் மகேந்திரன், நாகராஜன், வட்ட செய லாளர் சீனிவாசன், கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் லட்சுமி விநாயகரின் வீதி உலா நடைபெற்றது.

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பா பட்டியை சேர்ந்தவர் நீலாமணி (வயது 50). இவருடைய கணவர் ராஜேந்திரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். இவரது மகள் ராஜேஸ்வரி (31), பேரன் சதாசிவத்துடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயுடன் வசித்து வந்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நீலாமணி கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வருமானம் இல்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவழித்து கொண்டே இருந்ததால் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வயிற்றுப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
    • விழா ஏற்பாடுகளை முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் செய்திருந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் பழமையான வயிற்றுப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை பொருட்களை கொண்டு பிள்ளையாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் வயிற்றுப் பிள்ளையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொழுக்கட்டை, சுண்டல், கனி வகைகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, அன்ன வகைகள் பிள்ளையாருக்கு படைக்கப்பட்டன. பின்னர் தீபாராதனை நடந்தது. பக்தர்க.ளக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் செய்திருந்தார்.

    ×