search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில் தேரடி திடலில் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலா ளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில்குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை மற்றும் மாவட்ட நகர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியை உடனடியாக அமைக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கிராமங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டத்தின் பழமையான நகராட்சி தேவகோட்டை நகராட்சி ஆகும். நகரில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் வாக்கா ளர்களை கொண்ட நகராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி வேண்டும் என தமிழக அரசுக்கு நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை வைத்தார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லா ததால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் போதுமான இடவசதியும் எந்நேரத்திலும் மேல்நிலைப்பள்ளி இங்கு வரலாம் என எதிர் பார்ப்போடு 2 வகுப்பு வரை கட்டிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

    மேலும் கட்டிடங்கள் பற்றாக்குறை ஏற்படுமாயின் அதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் கட்டிடங்களை கட்டித் தர தயாராக உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி வருவதற்கு ரூபாய் 2 லட்சம் நகராட்சி நிர்வாகம் பணம் கட்டியுள்ளது. ஆனால் இதுவரை மேல்நிலைப் பள்ளி வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள். முதல் நகர்மன்ற கூட்டத்தி லேயே நகருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை வரவில்லை. இங்கு மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பயில அருகில் உள்ள அனுமந்தகுடி, பெரியகாரை கிராமங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.

    எல்லா பகுதிகளிலும் கிராமத்தில் இருந்து மேல்நிலை படிப்பிற்காக நகரங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் தேவகோட்டை நகராட்சியில் மாணவ-மாணவிகள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்காக கிராமங் களுக்கு செல்கின்றனர்.

    தேவகோட்டை நகருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வர அரசு உடனே உத்தரவு விட்டு செயல்படுத்தினால் நகர் மன்றமும் தேவ கோட்டை மக்களும் மாணவ செல்வங்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், கீழடி ஆகிய இடங்க ளில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட் களை விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி – விற்பனை மையம் மகளிர் திட்டம் வாயிலாக அமைக் கப்பட உள்ளது. அவ் விற்பனை மையம் அமைந் துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக் குழு, கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

    தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்து ஒரு வங்கிக்கடன் இணைப் பாவது பெற்று இருத்தல் வேண்டும்.

    அங்காடியின் உரிமம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்திடம் மட்டுமே இருக்கும். அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு, கூட்டமைப் பிற்கு 6 மாதங்களுக்கு வழங்கப் படும்.

    பின்னர் சுழற்சி முறையிலும், விற்பனை மற்றும் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை-630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு 04575 240962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மானாமதுரை-திருப்புவனத்தில் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    திருப்புவனத்தில் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், மீனவரணி மாவட்ட நிர்வாகி அண் ணாமலை கலந்து கொண்டனர்.

    இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் தலைமையில் தி.மு.க.வினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர். இதில் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நகர் மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,ஒன்றியச் செயலர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, அண்ணா சிலைக்கு மாலை ஊராட்சி ஒன்றியத் தலை வர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப் பங்களை அனுப்ப வேண்டும்.

    சிவகங்கை

    உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டி சிவகங்கை மாவட்ட அள வில் நடைபெற உள்ளது.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04575-241487, 99522 80798 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    வருகிற 31-ந்தேதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • பிரபு அனைவரையும் வரவேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் ஜெயகுண சேகரன், சிவமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அரசு தலைமை கொரடா மனோகரன், தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா ஆகியோர் தி.மு.க. அரசை பற்றி விமர்சனம் செய்தனர்.

    இந்த மேடையில் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு செந்தில்நாதன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை அடுத்த வெளியாத்தூர் ஊராட்சியில் உள்ள விவசாய நிலையத்தில் புதிய டாஸ்மாக் கடைதிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அங்கு புதிய கடை கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

    தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் டஸ்மாக் கடைஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாத்தனூர், வெளியாத்தூர், கண்டரமாணிக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட கிராம மக்கள், விவசாய சங்கத்தினர் திடீரென புதிய டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்களின் போராட்டம் குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாஸ்கரன், வட்டாட்சியர்கள் கந்தசாமி, வெங்கடேசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.
    • மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

    தேவகோட்டை:

    புதுச்சேரி மாநிலம் வம்பபட்டு பகுதியை சேர்ந்தவர் பாவாடி. இவரது மகன் ஹரிகரன் (வயது26). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் பரணி (19). நண்பர்களான இவர்கள் மோட்டார் சைக்கிளில் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ராமேசுவரத்திற்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பைபாஸ் ரோட்டில் உள்ள உதயாட்சி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த ஹரிகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பரணியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.

    • வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

    அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

    இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

    தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் காத்திருக்கும் இளை ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதா ரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதி வினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடைய லாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அண்ணா சிலைக்கு ஓ.பி.எஸ்.அணி-அ.ம.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினர்.

    காரைக்குடி

    அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலா ளர் அசோகன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினர். இதில் அ.ம.மு.க. மாநில பொறி யாளர் அணி துணை தலைவர் சரவணன், தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின் குமார், பொதுக் குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட ஓட்டுநர் அணி மங்கலம் பூமி, சிறுபான்மை அணி மாவட்ட துணை செயலா ளர் மாலிக்கான், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பாரதி, நகர இணை செயலாளர் ராஜா, இலக்கிய அணி முத்துக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் கல்கீஸ்வரன். இளைஞரணி செயலா ளர் கணேசன், எம்.ஜி.ஆர் மன்றம் தர்மராஜ், மாணவர் அணி முருகேசன், பாசறை சஞ்சய், நகர தலைவர் மைக்கேல், வட்ட செய லாளர்கள் சேகர், சக்திவேல், சையது, ராஜா, பாண்டியன் மற்றும் ஓ.பி.எஸ் அணி மாநில இளை ஞரணி இணை செயலாளர் திரு ஞானம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, மாவட்ட பேரவை செயலாளர் அங்குராஜ், நகர பேரவை செயலாளர் ரவி உள்பட இரு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கல் திரளாக கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    • அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ, மாவட்ட எம்.ஜி.ஆர் இளை ஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், பொதுக் குழு உறுப்பினர் புலவர் பழனியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர மகளிரணி தலைவி சுலோச்சனா, நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, ராம்குமார், பிரகாஷ், அமுதா, ராதா, நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், வட்ட செயலாளர் இலைக்கடை சரவணன், வழக்கறிஞர் காளீஸ்வரன் உள்பட நிர்வா கிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    ×