search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தின ஊர்வலம் நடந்தது.
    • இந்த கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தினத்தையொட்டி ஊர்வலம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள வேலுநாச்சியார் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கியது. நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வண்ண கையெழுத்துகளால் எழுதப்பட்ட கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.

    • ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில்ன பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் பயிர் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கும் கூடுதலாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி பயிர் கடன்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

    பயிர் கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் கலெக்டர், இணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை எந்தியரமயமாக்கல் திட்டம் 2023-24-ன் கீழ் மானிய விலையில் பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழா திருப்பத்தூர், மானாமதுரையில் நடைபெறுகிறது.

    அதில் திருப்பத்தூரில் நடைபெறும் விழாவின் மூலம் 68 விவசாயி களுக்கும் மானாமதுரையில் நடைபெறும் விழாவின் மூலம் 77 விவசாயிகளுக்கும் என மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மொத்தம் ரூ.3 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீ்ட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் சிறு விவசாயி களுக்கு ரூ.85 ஆயிரம் மானியத்தொகையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் மானிய தொகையும் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த விவசாயி களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மானியத்தொகையும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில்இ திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
    • இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    • கிருங்காகோட்டை அழகுநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கிருங்காகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காகோட்டை கிராமத்தில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா முதல் கால யாகபூஜையுடன் தொடங்கியது.

    அதைதொடர்ந்து 2-ம் காலம், 3-ம் காலம் பூஜைகளுடன் யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித கடம் தீர்த்தங்களுடன் புறப்பாடாகி கோவில் விமான கோபுரம் கும்ப கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து அழகுநாச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழில் அதிபர் பச்சேரி சி.ஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக விழாவை கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகுநாச்சியம்மனை வழிபாடு செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கிருங்காகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அரிபுரம் கிராமத்தில் நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரிபுரம், காலாங்கரைப்பட்டி, வைரவபுரம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் காரையூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரி சையாக நடந்தது. குன்றக் குடி பொன்னம்பல அடி களார் தலைமையில் உமாபதி சிவாச்சாரியார்கள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    விழா குழு பணிகளில் குமாரசாமி, தர்மசீலன், கண்ணன், துர்வாசன், கனகரத்தினம், சண்முகம், உமாபாலன், சடையாண்டி, சாந்ததேவன், செல்வ ராஜ்,யசோதரன், ஜெக நாதன், சிவபெருமாள் மாரி யம்மாள் மற்றும் வளர்பிறை விளையாட்டு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் கண்டவராயன் பட்டி காவல் ஆய்வாளர் அய்ய னார் தலைமையில் காவ லர்கள் ஈடுபட்டனர்.

    வேலங்குடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள், லட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டது. நேற்று கணேஷ், குருசாமி குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வீரணமு டையார் மகரிஷி கோத்திர பங்காளி வகையறாக்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தேவகோட்டை அருகே ஏழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஏழுவன்கோட்டை கிராமத்தில் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்- விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த சில மாதங்க ளுக்கு முன்பு பாலாலயபூஜை நடத்தப்பட்டு கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவில் அருகே உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சா ரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    முன்னதாக சிவனடியார் கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் தென்னிலை நாட்டார்கள் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி -அம்பாள் மூலஸ்தானங்க ளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இளையான்குடியில் உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
    • பேராசிரியர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் இணைந்து "உயர்கல்வி யில் தொழில்முனைவு மேம்பாட்டு திறன்" என்னும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சமுசுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

    • அதிகுந்த வரத அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள நாலுகோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரண புஷ்கலா சமேத அதிகுந்த வரத அய்யனார் கோவில் உள்ளது.

    இங்கு புரவி எடுப்பு விழா கிராம கமிட்டி தலைவரும், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவருமான மணிகண்டன் மற்றும் ஆறூர் வட்டகை நாடு நாட்டு அம்பலம் அழ.ஒய்யணன் முன்னிலையில் நடைபெற்றது.

    அய்யனார் சாமிக்கு காப்பு கட்டி விழா தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

    முன்னதாக கிராம விநாயகர் கோவிலில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட மண் குதிரைகளை விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தோளில் சுமந்து மங்கள வாத்தியங்களுடன் கிராமத்தை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் சென்றடைந்து அய்யனார் சாமிக்கு புரவிகளை சமர்ப்பித்து வழி பட்டனர்.

    முடிவில் மூலவர் அய்யனார் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர்.

    • வீடுகள் தோறும் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ரூ.25 முதல் ரூ.200 வரை கிடைக்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட் கள் உலகப் புகழ்பெற்றது ஆகும். இசை கலைஞர்களால் உலக அரங்கில் ஐ.நா. சபையில் மானாமதுரை மண்ணில் செய்யபட்ட கடம் வாசித்தது மானாமதுரைக்கு மேலும் புகழ் சேர்த்தது.

    இங்கு தயாராகும் மண் பாண்ட பொருள்கள் உறுதி மிக்கது என்பதால் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து மானாமதுரை மண்ணில் செய்யப்பட்ட பொருட்களை அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் இங்கு மண்பாண்ட பொருட்கள் செய்யப்படுகிறது. ஜனவரி முதல் டிசம்பர் வரை பொங்கல் பானை, அடுப்பு, அக்னி சட்டிகள், மண் பானை, கூஜா, பூந்தொட்டிகள், திருவிழாவிற்க்கு குதிரை மற்றும் சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், தீப ஒளி விளக்குகள்,

    அகல்விளக்கு கிளியான் சட்டிகள், நட்சத்திர ஓட்டலுக்கு தந்தூரி அடுப்புகள் மற்றும் அலங்கார மண் விளக்குகள், கலைநயம் மிக்க மண்சிலைகள் செய்யப் பபட்டு தமிழகம் முழுவதும் அனுப்பபட்டு வருகிறது.

    தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் வீடுகள் தோறும் வித, விதமான விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கற்பக விநாயகர், ஆனந்த விநாயகர், இலை விநாயகர், என வித வித மாக, வண்ணமயமாக சிலை கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுமார் 50-க்கும் மேற் பட்ட வீடுகளில் கடந்த இரண்டு மாதமாக விநாயகர் சிலைகள் தயார் செய்து வெளியூர்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது. இதேபோல் மிக பெரிய அளவில் தூய்மையான மண் மூலம் மாவட்டத்தில் இங்கு மட் டுமே விநாயகர் சிலை கள் வித விதமாக தயாராகி வருகிறது.

    இங்கிருந்து சுமார் 50 விநாயகர் சிலைகள் காரைக் குடி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு செல்கிறது. இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு மூன்று நாட்கள் முன்பு அழகிய வடிவமைப்பு கொடுக்கப் பட்டு வர்ணம் பூசி தத்ரூபமாக வேன்களில் கொண்டு செல்லப்படும்.

    இதுபற்றி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் ஆனந்த வள்ளி என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைத்து விநாயகர் சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். இதற்காக ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் புதிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வழிபடுவதால் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர் கள் வாழ்வு வளம் பெறுகிறது.

    இந்த ஆண்டு பல ஊர்க ளில் இருந்து ஆர்டர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. வெளியூர்க ளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ரூ.25 முதல் ரூ.200 வரை விநாயகர் சிறிய சிலைகள் கிடைக்கிறது. உற்பத்தி விலைக்கு வழங்கு வதால் வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து அதிக அளவில் விநாயகர் சிலை களை வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை வெகு விமரிைசயாக நடக்கிறது.
    • பாதுகாப்பு பணிகளை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின் தலைமை யில் போலீசார் செய்து வருகின்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அருள்பா–லித்து வரும் கொப்புடைய–நாயகி அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளை (4-09-2023) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி நகரின் தென்பகுதியாம் செஞ்சை சங்கராபுரம் என்ற கிராம பகுதியில் இருந்து வரும் காட்டம்மன் கோவிலில் எழுந்தருளி விக்ரமாக இருந் ததை இங்கு கொண்டு வந்து ஸ்தாபித்ததாக தெரிய வருகிறது. அக்காலத்தில் ஆண்டு வந்த அரசன் அன் றாடமும் தன் வழிபாடு முறைகளையும் வரவு-செலவு மற்றும் அலுவல்க ளையும் கொப்புடையாளி டம் ஒப்புவித்து வந்தான் என்பது செவிவழி செய்தியா கும்.

    அம்மனின் காதில் கொப்பு எனும் காதணியை அணிந்திருந்த காரணமாக கொப்புடையாள் என அழைக்கப்பட காரணமா யிற்று. காரைக்குடியின் காவல் தெய்வமாக அருள் பாலித்து வரும் கொப்புடை யம்மன் கோவிலில் 1975, 1989, 2008 ஆம் ஆண்டுகளில் திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டு செய்யப் பெற் றுள்ளது.

    தற்போது பல அறக்கொ டையாளர்களின் உபயத் தால் திருப்பணி செய்யப் பட்டு கடந்த புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு யாககால பூஜைகளுடன் தீபாராதனைகள் காட்டப் பட்டு நாளை சீரும் சிறப்பு மாக கொப்புடையம்ம னுக்கும், பரிவார மூர்த்திக ளுக்கும் திருக்குட நன்னீ ராட்டு நடைபெற உள்ளது.

    சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கும்பாபிஷேக விழாவிற்கான பணிகளை ஆய்வுசெய்து பக்தர்களுக் கும் பொதுமக்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்ய ஆலோசனை வழங்கினார். நகர்மன்ற தலைவர் முத்து துரை கோவில் குளத்தை தூர்வாரி பொதுமக்கள் வச திக்காக பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளார்.

    திருக்குட நன்னீராட்டு பணிகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பழனிக்கு மார், தக்கார் ஞானசேகரன், உதவி ஆணையர் செல்வ ராஜ், செயல் அலுவலர் மகேந்திரபூபதி, ஆய்வர் பிச்சுமணி, நாட்டார், நக ரத்தார்கள், திருப்பணிக்கு ழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் திருமடங்க ளின் தலைவர்கள், அமைச் சர்கள், சட்டமன்ற, பாரா ளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு பணிகளை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின் தலைமை யில் போலீசார் செய்து வருகின்றனர்.

    • களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

    சிங்கம்புணரி

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன் னிட்டு சிங்கம்புணிரியில் பிரமாண்ட களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சிம்மாசனத்தில் அமர்ந்த விநாயகர், கஜமுக விநாயகர், வெற்றி விநாயகர் என பல்வேறு விநாயகர் உருவ சிலைகள் செய்யப் பட்டு வருகிறது.

    அரசு விழாக்களில் பாரம்பரிய தொழில் செய்ப வர்களின் படைப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    பாரம்பரியமாக சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்கம் கூறுகையில், எங்களுடைய தொழில் மாறிவரும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்படும் விநாகர் பொம்மைகள், சிலைகள் பிரபலமாகி வருகின்றன.

    இவை பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு நீர் நிலைகளை மாசுப்படுத்தக் கூடியவை.ஆகவே தமிழக அரசு அரசு விழாக்களில் கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்.
    • 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நீர் நிலைகள் பாதுகாப்புக்குழு செயல் திட்டக்கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    நீர் நிலைகளில் கொள்ள ளவினை நிலை நிறுத்துதல் போன்ற பணிகளில் தொடர் நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்தல் பணியில் தொடர்புடைய துறைகள் மட்டுமன்றி, பொது தொண்டு நிறுவ னங்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு நடவ டிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் பொது அமைப்புக்கள், விவசாய சங்க கூட்டமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகி யோர்களை ஒருங்கிணைத்து நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில், நீர் நிலைகள் குழு மூலம் மாவட்டத்தில் 2 நீர் நிலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதில் மாபெரும் தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமி டப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 9-ந் தேதியன்று திருப்புவனம் நகரை ஒட்டியுள்ள வைகை நகர் பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் பணியாற்றிட ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர தன்னார்வ தொண்டு அமைப்புக்களை சார்ந்தோர்கள், மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்ணான 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இய்குநர் சிவராமன், செயற் பொறியாளர்கள் (சருகனியாறு, மணிமுத்தாறு, பெரியாறு வடிநிலக் கோட்டங்கள்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (நில அளவை), சிவகங்கை வன சரக அலுவலர், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் இதர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×