search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரே சுவரர் மேல்நிலைப் பள்ளி யில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங் கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை வகித் தார். முன்னதாக பள்ளி செயலர் வெங்கடாசலம் செட்டியார் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். பள்ளி யின் பொருளாளர் அம்மை யப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, நெற் குப்பை சேர்மன் பழனியப் பன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், பள்ளிக்கு சைக்கிள் நிறுத்தும் நிழல் கூடம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அமைத்து தருவதாக உறுதி அளித்தார். அதற்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இவ்விழாவில் கிளைச் செயலாளர் சுந்தரம் செந் தில் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடி வில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
    • முன்னதாக பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று சிவகங்கையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அந்த கட்சியி னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    முன்னதாக பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள், ஸ்டிபன் அருள்சாமி, கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, சிவசிவஸிதர், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், நகர துணை செயலாளர் மோகன், புலியடிதம்பம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் பாபு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ண குமார், தாமு முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 8-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெற உள்ளன.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 5-ந்தேதியும், காரைக்குடியில் வருகிற 8-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்ட பத்தில் கல்வி கடன் முகாம் நடக்கிறது.

    எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ- மாணவிகள் www.vidyalakshmi.co.in என்ற இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாம்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 பாஸ்போர்ட்டு புகைப்படம், வங்கி பாஸ் புத்தகம், இருப்பிட சான்று, வருமான சான்று, ஜாதி சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், நன்னடத்தை சான்று, கல்விக்கட்டண விவரம், மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மானாமதுரை அருகே புதிய பள்ளி கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ்.காரைக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடத்தை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி திறந்து வைத்து பேசினார். விழாவில் இளையான்குடி வடக்கு ஒன்றியம் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன், எஸ்.காரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு ராஜா மற்றும் அரசு துறை அதிகாரி கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவி கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவ கங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்கி ழமை சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    அதில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இ-சேவை மையம் மூலமாக விண்ண் பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளி கள் ஒப்புகை ரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக முகப்பு நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) 2 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய உரிய சான்றுகளுடன், இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இலுப்பக்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியது.
    • ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவாக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் சீதா வைரவன், அமுதா லெட்சுமணன், இலுப்பக்குடி ஊராட்சி செயலர் வீரப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை குழந்தை தெரஸ் நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் ரூ.15.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • www.tnsevai.gov.in/Citizen Registration என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 13 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11 ஆயிரத்து 500 வீதம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களும் வழங்கப் பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    அடுத்த மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் வருகிற செப்டம்பர் 20ந்தேதி தேவகோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகிய அட்டை களை பெறுவதற்கு ஏதுவா கவும், மாற்றுத்திறனாளி களுக்கு சலுகைகள் சென்று சேருவதை உறுதி செய்யவும் இந்த முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடனுதவிகள், திருமண உதவி திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2,000/- வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கு ஏதுவாக அரசால் ஏற்படுத்தப் பட்டுள்ள www.tnsevai.gov.in/Citizen Registration என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப் பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட மாற்றுத்திறனா ளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக வகுப்பு வருகறி 28-ந்தேதி நடக்கிறது.
    • முதலில் வரும் 100 மா வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு களான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு களுக்காக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

    மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https://bit.ly/svgtetclass என்ற கூகுல் பார்மை பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். முதலில் வரும் 100 மாண வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மேலும் https://t.me/svgemployment என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

    • ஐ.டி.ஐ.யில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலு வலகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கட்ட கலந்தாய்வு முடிந்து, தற்போது வருகிற 31-ந்தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையத்தில் தற்போது டர்னர், மெஷி னிஸ்ட், மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கில் போன்ற 2 வருட தொழிற்பிரிவுகளுக்கும், கோபா, இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவு களுக்கும் ஒரு சில இடங்களே காலியாக உள்ளது.

    எனவே மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவர்கள் உடனடியாக காரைக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேரலாம். இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாணவர் களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை யில்லா மிதிவண்டி, விலை யில்லா சீருடைகள், விலை யில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள், போன்றவை வழங்கப்படும். மேலும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750/- உதவித் தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750/- உதவித் தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாண வர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காரைக்குடி பகுதியில் உள்ள மாண வர்கள் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் மன்ற தலைவராக பதவி வகித்த அ.புசலான் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பேரூராட்சிக்கு துணை சேர்மனாக பதிவி வகித்த கே.பி.எஸ். பழனியப்பன் கடந்த மாதம் 30-ந்தேதி பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார்.

    தொடர்ந்து புதிய சேர்மன் பதவிக்காக போட்டியிடுவதற்கான அறிவிக்கையை செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் வெளியிட்டார். இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து பொறுப்பு சேர்மனாக பதவி வகித்து வந்த பழனியப்பன் ஒரு மனதாக புதிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி சான்றிதழை அவரிடம் செயல் அலுவலர் வழங்கினார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணன், சேக்கப்பன், நிலோபர்நிஷா, கணேசன், சித்ரா தேவி, அமுதா, அழகு, பாப்பா, குமார், தன பாக்கியம், இளநிலை உதவியாளர் சேர லாதன், வரி தண்டர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் ராம சாமி, கருப்பையா நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மாணிக் கம், முருகேசன், ஜெய்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டி 20 பேர் காயமடைந்தனர்.
    • மலை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு கிராமத்தில் இறந்த மூதாட்டிக்கு 5-ம் நாள் காரியமாக சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அய்யர் நெருப்பு வைத்து சடங்குகள் செய்துவிட்டு நெருப்பை அணைப்பதற்காக தண்ணீரை அதன்மேல் ஊற்றினார். இதனால் எழுந்த புகையால், அருகே புளிய மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கூடு கலைந்தது. இதனால் தேனீக்கள் படையெடுத்து வந்து அங்கிருந்த நபர்களை விரட்டி கொட்டத் தொடங்கியது. வயதானவர்கள் தப்பித்து ஓட முடியாமல் தேனீக்களிடம் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதில் 20 பேர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 75 வயது மதிக்கத்தக்க ரத்தினம் என்பவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மலை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 483 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது.

    3 பள்ளிகளில் மொத்தம் 483 மாணவ- மாணவிளுக்கு ரூ.23.09 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிளை அமைச்சர் பெரியகருப்பன், வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், துணை சேர்மன் கான்முகமது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிர மணியன் (திருக்கோஷ்டி யூர்), சுசிலா (கோட்டை யிருப்பு), மாவட்ட விளை யாட்டு அணி நாராயணன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகளான சகாதேவன், பஷீர்அகமது,சீமான் சுப்பு, கண்ணன், ஹரிகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் பள்ளி தலைமையாசி ரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×