search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பையில் இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி
    X

    திறன் வளர்த்தல் பயிற்சி நடந்த போது எடுத்தபடம்.

    அம்பையில் இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி

    • வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.
    • கூட்டத்தில் உழவன் செயலி குறித்து எடுத்து கூறப்பட்டது.

    அம்பை:

    நெல்லை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மற்றும் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனம் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முக்கிய பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்னும் தலைப்பில் அம்பையில் நடத்தப்பட்டது.

    6 நாட்கள் பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் தொழில் நுட்பத்தில் வல்லுநராக்கி, தொழில் முனைவோராக மாற்றுவதே முக்கிய நோக்கமாகும்.

    2-ம் நாளாக நடத்தப்பட்ட பயிற்சியில் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவன இயக்குநர் சங்கர லிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

    உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வர வேற்று பேசினார். இயக்குநர் அவர்தம் உரையில் இப்பயிற்சியில் பயிற்சி பெற்றவர்கள் தாம் பெற்ற பயிற்சியின் நன்மையினை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டு மெனவும், வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.

    ரசாயன மருந்துகள் மற்றும் உரங்கள் பரிந்துரைக் கப்பட்ட அளவிற்கு அதிகம் இடுவதால் ஏற்படும் தீமைகளையும், சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு களை குறித்தும் எடுத்துரைத்தார்.

    மேலும் வேளாண் துறையில் விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப் பட்டுள்ள உழவன் செயலி குறித்து எடுத்து கூறினார்.

    பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணைப் பேராசிரியர் ஆல்வின், பூச்சி மேலாண்மையில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணி களின் பங்கு மற்றும் கவர்ச்சி பொறிகள் பயன் படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினார். பயிற்சிக் கான ஏற்பாடுகளை அட்மா பணியாளர்கள் ஈழவேணி, சதீஷ் , தங்கராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×