என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே திறன் வளர்ப்பு பயிற்சி
- பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
- மேலும் 59 நெல் பாரம்பரிய வகைகளை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
ஆலங்குளம்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் இருக்கும் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள அகரம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் முன்னிலையில் அனைத்து துறையின் பங்களிப்புடன் சமூகநிலை மாற்ற மேலாண்மை குழுவிற்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள, நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்து கூறினார். இணை பேராசிரியர் ஆல்வின் தேனி வளர்ப்பு வழிமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் எளிய முறைகளை எடுத்து கூறினார்.
லெட்சுமி தேவி, பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்து குறைந்த மகசூலில் போதிய லாபம் பெறும் வழிமுறைகள் மற்றும் அதன் குணாதிசயங்கள், முக்கியத்துவம் போன்றவற்றை கூறினார். மேலும் 59 நெல் பாரம்பரிய வகைகளை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கால்நடை உதவி அலுவலர் ராமசெல்வம் கால்நடை துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கஸ்தூரி கலந்து கொண்டு வேளாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்து கூறினார். நிகழ்ச்சியினை நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக்குமார் ஏற்பாடு செய்தனர்.