என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொங்கல் கறி விருந்து செலவுக்காக சந்தனமரம் வெட்டி கடத்தல்
- கைதான 5 பேர் கும்பல் திடுக்கிடும் தகவல் .
- சி.சி.டி.வி காட்சியை அய்வு செய்து வந்தனர்.
கோவை,
கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர்.
குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, நாகராஜ், சின்னதுரை மற்றும் போலீஸ் ஏட்டுகள் கார்த்தி, பூபதி, செந்தில் ஆகியோரை சந்தன மரங்களை வெட்டும் மர்ம நபர் பிடிக்க தீவிர ேசாதனையில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. காமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மொபட்டில் ஒரு வீட்டில் இருந்து சந்தன மரத்தை வெட்டி கடத்துவது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் இரவு பகலாக சோதனை செய்து சி.சி.டி.வி காட்சியை அய்வு செய்து வந்தனர். அதில் அந்த வாலிபர் மீண்டும் ஒரு வீட்டில் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கொண்டு இருந்தது பதிவானது.
உடனே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பின் தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபரை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து ராக்கிப்பாளையம் சென்று ஒரு தோட்டத்தில் சந்தன மரத்தை பதுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அைழத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூர் நெசவபாளையம் காலனியை சேர்ந்த செந்தில் (வயது38) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது உறவினர்கள் சத்தியமங்கலம் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (வயது 37), பீகாரை சேர்ந்த மிஸ்பர்(29) ஆகியோருடன் சேர்ந்து வருடம் வருடம் பொங்கல் பண்டிகைக்காக சந்தன மரங்களை வெட்டி ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ஹீமாயூன் (70), சத்தியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30) ஆகியோரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அவர்கள் இளநீர் விற்பது போல மொபட்டில் கோவை முழுவதும் சுற்றி சந்தன மரங்கள் உள்ள இடங்களை பார்த்துவைத்து இரவு நேரங்களில் மரங்களை வெட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதை விற்று வரும் பணத்தை வைத்து ரூ.1 லட்சம் வரை செலவு செய்து குடும்பத்துடன் பொங்கல் கறி விருந்து வைத்து கொண்டாடுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் கூறிய தகவலை வைத்து சந்தன மர கடத்தல்காரர்கள் சத்தியமங்கலம் செல்வகுமார் (37), செந்தில், மிஸ்பர்(29), ஹீமாயூன் (70), முகமது அலி ஜின்னா(30) அகியோரை கைது செய்தனர். இதில் செல்வகுமார் தலைவனாக செயல்பட்டுள்ளார்.
ேமலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், மொபட், மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள், சந்தனமர துண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிலையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு சந்தன மர கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்காரர்களை, போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்