search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் மண் பரிசோதனை
    X

    மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் மண் பரிசோதனை

    • இந்த பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன.

    அதேபோல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட பணிக்காகவும், வேலைக்கு செல்வோரும்,பள்ளி, மாணவ,மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்த பின்னர் மலைகளின் அரசி ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையம் கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், சிதில மடைந்தும்,மேல் பூச்சுகள் இல்லாமல் பொலிவு இழந்தும் காணப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து தமிழக அரசு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருப்பூர், கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மண் பரிசோதனை ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சுமார் 39 வருடங்களுக்கு இடித்து மீண்டும் புனரமைக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில் பஸ் நிலையத்தை புனரமைக்கும் வகையில் முதற்கட்டமாக மண் பரிசோதனை ஆலோசகர்களால் பஸ் நிலைய பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் ஆலோசகர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×