search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் குளக்கரையில் 2200 பனைவிதைகள் விதைப்பு
    X

    சாத்தான்குளம் குளக்கரையில் 2200 பனைவிதைகள் விதைப்பு

    • விஜயராமபுரம், வெங்கட்ராயபுரம் பகுதியில் பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
    • நவம்பர் மாதம் இறுதிக்குள் சாத்தான்குளம் வட்டத்தில் 10 ஆயிரம் பனைவிதைகளை விதைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் சமூக ஆர்வலர், பால்வளத்துறை ஊழியர் பிரவீன் தலைமையில் குளக்கரை, சாலையோரங்களில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பனைவிதைகள் விதைக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி விஜயராமபுரம், வெங்கட்ராயபுரம் பகுதியில் பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சாத்தான்குளம் கரையடி குளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2200 பனைவிதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திடக்குழு உறுப்பினர் ஏ.எஸ். ஜோசப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 3,4-வது ரீச் மணிமுத்தாறு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எம். மலையாண்டி பிரபு, நகர தி.மு.க. செயலர் மகா.இளங்கோ, தேவிஸ்ரீ அழகம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக ஆர்வலர்களான காவல்துறையை சேர்ந்த முத்துராஜ், தொழிலதிபர் பாலவிநாயகம் , புள்ளியல்த்துறையைச் சேர்ந்த டல்லஸ் மற்றும் முத்துசிவா, வருவாய்துறை ஜெயசெல்வன், வனத்துறை அருண்,மருத்துவதுறை வினோத், ஆசிரியர்கள் சாம், சந்திரா பொறியாளர் ராமச்சந்திரன், ஆகாஷ், சங்கர், மங்கையர்க்கரசி, இல்லம்தேடி கல்வி தன்னார்வலர் தினேஷனி உள்ளிட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்று பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். நவம்பர் மாதம் இறுதிக்குள் சாத்தான்குளம் வட்டத்தில் 10 ஆயிரம் பனைவிதைகளை விதைக்க உள்ளதாக தெரிவித்தனர். பனை விதை விதைக்கும் பணிக்கான ஏற்பாடுகளை பால்வளத்துறை ஊழியர் பிரவீன் செய்திருந்தார்.

    Next Story
    ×