என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டி.டி.என்.குழுமத்தின் சார்பில் வள்ளியூரில் புதிய பெண்கள் கலைக்கல்லூரி - சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
- நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
- கல்லூரி நூலகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் நேரு நர்சிங் கல்லூரி, ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தாளாளர், செயலாளர் ஹெலன் தலைமை தாங்கினார். தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு புதிய கல்லூரியை திறந்து வைத்தார்.
கல்லூரி நூலகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார். வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்கம் மண்டல இணை இயக்குநர் பாஸ்கரன், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை, வடக்கு வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை டயோனோமிக் இயக்குநர் வெல்லிங்டன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்கரெட் ரஞ்சிதம், வார்டு கவுன்சிலர் உஷா, மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ், வேளாண்மை துறை துணை இயக்குனர் ஸ்டேன்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கிகாரம் பெற்ற மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் வணிக வேளாண்மையியல் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளில் இருந்தும் கல்லூரிக்கு இலவச பேருந்து வசதிகள் உள்ளது.
இக்கல்லூரியில் அனுப வமிக்க பேராசிரியைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டு அரங்கம், மின் நூலகம், வேலைவாய்ப்பு மையம், முழுமையான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்