search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு  மாலை அணிவித்து மரியாதை
    X

    காமராஜர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஒன்றியக் குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன் மற்றும் பலர் உள்ளனர்.

    ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை

    • ஆலங்குளம் வந்த சபாநாயகர் அப்பாவுவிற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பின்னர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு குற்றாலம் செல்லும் வழியில் ஆலங்குளம் வந்தார். அவர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

    ஆலங்குளத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு இடம் தேர்வு செய்வது குறித்து பிரச்சினை எழுந்த போது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இடத்தில் சிலை அமைக்க உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு 3 நாட்கள் தங்க வனத்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் நம் பகுதி மக்கள் 5 நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த அரசு அனைத்து சமய வழிபாடுகளுக்கும் துணை நிற்கும் அரசு. எந்த ஜாதி. மத இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு வழிபாட்டுத் தலங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஒன்றியக் குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன். சமுத்திர பாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் எழில்வா ணன், நகர தி.மு.க. செயலாளர் நெல்சன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், மாரி வண்ணமுத்து, மகேஷ் மாயவன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் தங்க செல்வம் மற்றும் கவுன்சிலர் பொன் செல்வம், காங்கிரஸ் மாநில செயலர் ஆலடி சங்கரய்யா, ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஞானபிரகாஷ், நகரச் செயலாளர் வில்லியம் தாமஸ், பொறியாளர் அணி அமைப்பாளர் மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், அருணாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×