search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலமார்த்தாண்டபுரத்தில்  சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.


    பாலமார்த்தாண்டபுரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி பால மார்த்தாண்டபுரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கை முறை இன விருத்தி,தடுப்பூசி பணிகள், கால்நடைகள் மேலாண்மை மற்றும் கன்றுகள் பேரணி நடைபெற்றது.

    தென்காசி:

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி பால மார்த்தாண்டபுரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கை முறை இன விருத்தி,தடுப்பூசி பணிகள், கால்நடைகள் மேலாண்மை மற்றும் கன்றுகள் பேரணி நடைபெற்றது. சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் முன்னிலை வகித்தார்.

    கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் மற்றும் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் கால்நடை பண்ணை தியோ பிளஸ் ரோஜர், உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாறறினர்.

    தென்காசி கால்நடைத்துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் மருத்துவர்கள் செல்வகுத்தாலிங்கம், வெள்ளைபாண்டி, சிவக்குமார்,வசந்த மலர், செல்லப்பா ஆகியோர் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×