என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணஜெயந்தியையொட்டி திண்டுக்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அரிசிமாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
- கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாட ப்பட்டது. மகாவிஷ்ணுவின் 8வது அவதாரம் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகு லாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அரிசிமாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் யாதவ மேட்டு ராஜகாபட்டி கிருஷ்ணன் கோவில் பஜனை மண்டபத்தில், சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. மூலவர் வெள்ளி கவசத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவ மூர்த்தி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளி த்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் ராம ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள வேணு கோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிரு ந்தார். மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவி லில் கிருஷ்ணர் பச்சை பட்டு தலைப்பாகை அணிந்து ராஜ அலங்கார த்தில் காட்சி அளித்தார்.
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.