search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். சுவாமி நிகரில் முகில்வண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கொடிமரம் கருடன் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.

    நவதிருப்பதி கோவில்கள்

    இதேபோல் நவத்திருப்பதி களில் ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தர். இதற்காக ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×