search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அட்சய திருதியையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    நெல்லையப்பர் கோவிலில் குபேர லிங்க சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    அட்சய திருதியையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • அட்சய திருதியையொட்டி இன்று காலை தனாகர்ஷண குபேர மகா லெட்சுமி ஹோமம் நடந்தது.
    • பக்தர்கள் தங்களது நகைகளை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்து எடுத்து சென்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் குபேர லிங்கம் அமைந்துள்ள 3 சிவன் கோவில்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆகும். தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுவாமி நெல்லையப்பர் சன்னதி செல்லும் 2-வது பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய குபேரலிங்கம் சன்னதி உள்ளது.

    அட்சய திருதியை

    இங்கு அட்சய திருதியையொட்டி இன்று காலை தனாகர்ஷண குபேர மகா லெட்சுமி ஹோமம் நடந்தது. தொ டர்ந்து குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நகைகளை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்து எடுத்து சென்றனர்.

    இதில் குபேர லிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்களுக்கு அர்ச்சனை பிரசாதமாக குபேர மகாலட்சுமி நாணயம், குபேர மகா லட்சுமி ஐஸ்வரேஸ்வரர் படம், பஞ்சமுக ருத்ராட்சம், சிகப்பு கயிறு, தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் கயிறு, சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்ட விபூதி, குங்குமம், திருமாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×