search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநறையூர் ராமநாதசாமி கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
    X

    திருநறையூர் ராமநாதசாமி கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

    • தசரத சக்கரவர்த்தி வழிபட்டு பெயர் பெற்ற தலம்.
    • சனி பகவானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருநறையூரில் பர்வதவர்த்தினி சமேத ராமநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் ஜேஸ்டா தேவி, மந்தாதேவி ஆகிய இரு தேவியர்களுடன் மாந்தி குளிகன் ஆகிய குழந்தைகளுடன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். தசரத சக்கரவர்த்தி வழிபட்டு பெயர் பெற்ற தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நடந்த குளிகை கால சிறப்பு வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் சனி பகவானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தார். பின், மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், ஆய்வாளர் சத்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×