என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
- வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் காந்தி பிறந்த நாளையொட்டி
வருகிற 31-ந்தேதியும், நேரு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 3-ந்தேதியும் காலை 9.30 மணிக்கு நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் (டவுன்) நடக்கிறது.
காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்,வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும், கல்லூரிகளுக்கு காந்தியடி கள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறு கிறது.
நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளிகளுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், கல்லூரிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேரு வின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்பு களில் போட்டி நடைபெறும்.
நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவல கத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண்: 0462 2502521) தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்