என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
- நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.
- திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஓவியம் ,கட்டுரை,பேச்சுப் போட்டி, சமையல் உள்பட பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. ஏ.யு. ஆர்.ஏ.2023 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் 9,10,11, 12-ம் வகுப்புகளுக்கான பிரிவுகளில் 140 புள்ளிகளைப் பெற்று மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.பி.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சுந்தரராஜன், கலை அறி வியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.