என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி பாவூர்சத்திரம் பிரதான பகுதிகளில் நடை பெற்றது.
- தங்கள் வீடு அருகே தேர் வரும்போது மாலை, மெழுவர்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி யது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அருட்பணியாளர்கள் கலந்து கொண்டு திருப்பலி மற்றும் மறையுரை ஆற்றினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தேர்பவனி பாவூர்சத்திரம் பிரதான பகுதிகளில் நடை பெற்றது. அப்போது வீதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீடு அருகே தேர் வரும்போது மாலை, மெழுவர்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கி புனித அந்தோணியாரை வழிபட்டனர். தேர் பவனியில் கண்கவர் வான வேடிக்கை நடத்தப்பட்டது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நிறைவு விழா பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.