search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி பாரத் மாண்டிசோரி பள்ளி 3-ம் இடம்
    X

    வெற்றி பெற்ற பாரத் மாண்டிசோரி மாணவர்களைப் பாரத் கல்விக் குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், துணைமுதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.


    மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி பாரத் மாண்டிசோரி பள்ளி 3-ம் இடம்

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘அறிவியல் பட்டறை’ என்ற தலைப்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • இலஞ்சி பாரத் மாண்டி சோரி, ஆறுமுகநேரி கமலா வதி, அருப்புக்கோட்டை தேவாங்கர் உள்ளிட்ட 55 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி,ஆக.7-

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 'அறிவியல் பட்டறை' என்ற தலைப்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    இக்கண்காட்சியில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி, ஆறுமுகநேரி கமலா வதி, அருப்புக்கோட்டை தேவாங்கர் உள்ளிட்ட 55 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட தென்காசி இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவர்கள் சாய்ராம், முகம்மது முஸின் ஆகியோர் வனவிலங்குகள் ரெயில்வே பாதையில் வராமல் தடுக்கும் செயல் திட்டத்தை அமைத்திருந்தனர்.

    யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ரெயில்வே தண்டவாளத்தை நெருங்கும் போது வெடியோசை கேட்பது போன்ற செயல்திட்டத்தால் யானைகள் ரெயில்வே பாதையை விட்டு விலகிச் செல்வது போன்று வடிவமைத்திருந்தனர். இச்செயல் திட்டத்திற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு கிடைத்தது.செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் பாரத் மாண்டிசோரி மாணவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற பாரத் மாணவர்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.


    Next Story
    ×