search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில், மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி
    X

    போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    கும்பகோணத்தில், மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி

    • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டனர்.
    • முதலிடம் பிடித்த அணியினருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கால்பந்து கழகம், சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்றது. கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியின் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம் இடம் பிடித்த கும்பகோணம் முரட்டு சிங்கிள் புட்பால் கிளப் அணியினருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அத்லெடிக்ஸ் புல்ஸ் அணியினருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-ம் இடம் பிடித்த பாண்டிச்சேரி செலக்டேடு செவன்ஸ் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

    விழாவில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் அசோக்குமார், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பாபு, லியோன் சேவியர், சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர் மூர்த்தி, தீயணைப்புத்துறை இளங்கோவன், நகர மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,

    கண்ணன், பரமகுரு, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுரு போட்டியை தொகுத்து வழங்கினார்.

    முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×