search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான தொழில்நுட்ப போட்டி- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
    X

    மாநில அளவிலான தொழில்நுட்ப போட்டி- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை

    • சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
    • போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் 'டெக்ஸ்ட்ரா 2023' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான தொழில்நுட்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.

    போட்டோகிராபிக் போட்டியில் மாணவர் மோகன்ராஜ் முதல் பரிசையும், மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் சாந்தகுமார், ரமேஷ் குமார் ஆகியோர் முதல் பரிசையும் பெற்று சாதனை படைத்தனர்.

    இந்த சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன், கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார், கணினி அறிவியல் துறைதலைவர் சி. வேலாயுதம், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஜெயந்தி, பிருந்தா ஆகியோர் பாராட்டினர்.

    மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக தமிழ் வழியில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் 12 வகையான பாடங்களை ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள் பாலு, பசுங்கிளி பாண்டியன், சுந்தர வடிவேல், கதிரசேன், பாலகிருஷ்ணன், தீபாராணி, ராஜ் பினோ, மோதிலால் தினேஷ், கோடீஸ்பதி மற்றும் செல்வி சித்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இப்பயிற்சி வகுப்பு நிறைவு விழா கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமையில் நடந்தது. கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார் பாராட்டி பேசினார். கல்லூரி முன்னாள் மாணவரும், நெல்லை நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளருமான கா. சுரேஷ்ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள், கடின முயற்சியோடு, தோல்வியை கண்டு அஞ்சாமல், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றினால் எளிதாக வெற்றி பெற முடியும், என்று கூறினார்.

    பொருளியல் துறை தலைவர் சி. ரமேஷ் பயிற்சி வகுப்பின் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சி. முருகேஸ்வரி வரவேற்று பேசினார். பயிற்சி வகுப்பு இயக்குனர் உமா ஜெயந்தி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பின் அனைத்து நாட்களும் வருகை தந்த முதுகலை 2-ம் ஆண்டு பொருளியல் மாணவி அபிதா மற்றும் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முத்துராமன், சரவண சுயம்பு ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியை பேராசிரியர் சிவ இளங்கோ தொகு த்து வழங்கினார். 29 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கணேசன், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×