என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருகிற 30-ந் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்- இந்திய கம்யூனிஸ்ட்
- மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.
- வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
கும்பகோணம்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார்.
எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம் பேசினார்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடை க்குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து.
மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.
அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைதொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50 மற்றும் ரூ.40 என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும்.
மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து.
வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூ தியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்ப னந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்