என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பச்சையாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
- ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர்.
- கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தச்சநல்லூர் கரையிருப்பு அய்யாசாமி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாணவன் மீது தாக்குதல்
எனது குழந்தைகள் தச்சநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தை களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும், தேர்வில் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டியும் வருகின்றனர்.
கடந்த 8-ந்தேதி எனது மகனை அந்த பள்ளி ஆசிரியர் புத்தகத்தை கொண்டு தாக்கியதில் அவனது காதில் வலி ஏற்பட்டு காயம் இருந்து வருகிறது. இது தொடர்பாக எனது மகன் எங்களிடம் வந்து தெரிவித்த போது நாங்கள் தட்டி கேட்கின்றோம் என்றோம்.
அப்போது அவன், தட்டிக் கேட்டால் ஆசிரியர்கள் பெயில் ஆக்கி விடுவார்கள் என்று மிரட்டியதாக தெரிவித்தான். விசாரித்து பார்த்ததில் அந்த பள்ளியில் ஏராள மான மாணவர்களை ஆசிரியர்கள் இதுபோன்று நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறி இருந்தனர்.
மணல் திருட்டு
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
களக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற ங்களுக்கு உட்பட்ட கிராம ங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை. இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
ஆனால் இங்கு சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பச்சையாற்றின் படுகையில் மணல் திருட்டு தாராளமாக நடைபெறுகிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்