search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய விருது பெற்ற தூத்துக்குடியை சுகாதாரம், பசுமை நிறைந்த மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பேச்சு
    X

    தேசிய விருது பெற்ற தூத்துக்குடியை சுகாதாரம், பசுமை நிறைந்த மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பேச்சு

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் நிர்வாக பணிகள், பொது சுகாதார பிரிவின் மூலம் பள்ளிகள்,மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகி மாநகராட்சிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, தேசிய விருதினை நானும், கமிஷனரும் இணைந்து பெற்றுக்கொண்டோம். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கி வாழ்த்து பெற்றோம். அதுபோல அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் , பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோரிடமும் வாழ்த்துக்கள் பெற்றோம். இதற்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த விருது பெறப்பட்டுள்ளதால் வருகிற காலங்களில் மாநகராட்சியை சுகாதாரமாகவும், பசுமை நிறைந்த நகரமாகவும், மாசற்ற சுற்று சூழல் மேம்பாடு அடைந்த நகரமாகவும் இருக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள், மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், கமிஷனருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் காற்று மாசுபடுவதை தவிர்த்தல், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் பொருட்டு மியாவாகி முறையில் அமைக்கப்பட்ட அடர் காடுகளை தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுப்பது, மாநகராட்சி பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் நிர்வாக பணிகள், பொது சுகாதார பிரிவின் மூலம் பள்ளிகள் மருத்துவமனைகள் உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சுகாதாரச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் திருத்தம் செய்து வசூலிக்க தீர்மானிப்பது உட்பட பல்வேறு தீர்மா னங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி,கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழு தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×