search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை நகராட்சியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    கூட்டத்தில் ஷாநவாஸ் எம்.எல்.வி.ற்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

    நாகை நகராட்சியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

    • விழாவில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
    • புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற்குழும கட்டிடத்தில் நாகூர் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2022-23 சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளில் நாகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறேன்.

    நாகையில் வீடு எடுத்து தங்கி பணியாற்றுகிறேன். எம்.எல்.ஏ அலுவலகம் நாள்தோறும் இயங்குகிறது.

    மனுக்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

    மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று, அவை மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன்.

    இதுவரை 50சதவீதத்திற்கு மேல் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. நாகை தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தையும் சட்டமன்றத்தில் எழுப்பி உள்ளேன். புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    நாகையில் அரசு சட்டக் கல்லூரி, சூடாமணி விகார் பகுதியில் அருங்காட்சியகம், சிப்காட் தொழிற் பூங்கா, திருமருகல் தனி தாலுகா, மறைமலை அடிகள் நினைவு அரங்கம், நாகை நகரில் அரசு மேல் நிலைப் பள்ளி, நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். லயன்ஸ் சங்கம் சார்பில் ஷாநவாஸ் எம்எல்.ஏ.விற்கு பாராட்டு கேடயம் வழங்கப்ப ட்டது.

    இந்நிகழ்வில் லயன்ஸ் தலைவர் கே.சேகர், செயலாளர் யு.சதீஸ் குமார், பொருளாளர் டி.காத்தை யன், மாவட்ட நிதி ஆலோ சகர் ஆர்.பெலிக்ஸ் ரா யன் உள்ளிட்ட லயன்ஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×