search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
    X

    பெருமாள் கோவிலில் கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்த காட்சி.

    தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

    • பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கும்பாபிஷேக பணி

    இந்த கோவிலில் 2000-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அதற்கான பணிகளை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

    தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை தொடங்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில், அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மார்க்கெட் மேலாளர் சங்கர், முருகன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×