என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூகரெங்கபுரத்தில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
- ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவருமான அனிதா பிரின்ஸ் வரவேற்றார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ேஜாசப்பெல்சி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் அதன் வழி தொடர்ச்சியாக தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறந்த முறையில் நடைபெற்று வரும் ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சாலை விபத்தில் சிகிச்சை பெறுவதற்கான இன்னுயிர் காப்போம் திட்டம், வீடு தேடி மருத்துவம் , அனைவருக்கும் கல்வி, கலைஞர் காப்பீடு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் எடுத்து கூறினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பேச்சாளர் உடன்குடி தனபால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர் இசக்கிபாபு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்